/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி 10ம் கட்ட அகழாய்வு செம்பு பொருள் கண்டெடுப்பு
/
கீழடி 10ம் கட்ட அகழாய்வு செம்பு பொருள் கண்டெடுப்பு
கீழடி 10ம் கட்ட அகழாய்வு செம்பு பொருள் கண்டெடுப்பு
கீழடி 10ம் கட்ட அகழாய்வு செம்பு பொருள் கண்டெடுப்பு
ADDED : ஜூலை 04, 2024 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி:சிவகங்கை மாவட்டம் கீழடியில், தனியார் நிலத்தில் 10ம் கட்ட அகழாய்வு பணி ஜூன் 18ல் துவங்கியது. இதுவரை இரு குழிகள் மட்டும் 3.5 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு அகழாய்வு நடந்துள்ளது. இதில் பாசிகள், கண்ணாடி மணிகள், தா என்ற தமிழி எழுத்து பானை ஓடு, மீன் உருவம் பொறித்த இரு பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், 10ம் கட்ட அகழாய்வில் சற்று பெரிய அளவிலான செம்பு பொருட்கள் கிடைத்துள்ளன. இதனால், 2,600 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் செம்பு பொருட்களை பயன்படுத்தியிருப்பது தெரிந்தது.