ADDED : ஆக 05, 2024 10:28 PM

சிவகங்கை, - சிவகங்கை அருகே கீழவாணியங்குடியில் 10 ஆண்டுகளுக்கும் மேல் ரோடு அமைக்கப்படாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை அருகே உள்ளது வாணியங்குடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் கீழவாணியங்குடி பகுதியில் மானாமதுரை ரோட்டில் இருந்து கீழவாணியங்குடி கீழ தெருவிற்கு செல்லக்கூடிய ரோடு மிகவும் மோசமாக உள்ளது. இங்கு 100க்கும்மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இந்த ரோட்டில் அரை கிலோ மீட்டர் துாரம் குண்டும் குழியுமாக இருப்பதால் மழை பெய்தால் இந்த ரோடு சகதியமாக மாறிவிடுகிறது.
பொதுமக்கள் நடந்து செல்வதற்கும்,டூவீலரில் செல்வதற்கும் மிகவும் சிரமமப்படுகின்றனர். மழைக்காலங்களில் டூவீலரில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாவதாக புகார்தெரிவிக்கின்றனர்.
கிராம மக்கள் கறுகையில், இந்த பகுதியில் புதிதாக ரோடு போட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும். அவசரத்திற்கு டூவீலரில் கூட செல்லமுடியாது. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகம் சேதம் அடைந்துள்ள ரோட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.