/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாதுகாப்பில்லாமல் செல்லும் வாகனங்கள்
/
பாதுகாப்பில்லாமல் செல்லும் வாகனங்கள்
ADDED : ஜூலை 01, 2024 10:22 PM

திருப்பாச்சேத்தி:நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை, கிராமப்புற சாலைகளில் போதிய பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படும் கனரக இயந்திரங்களால் மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தின்பல்வேறு பகுதிகளில் கட்டுமான பணி செயல்பட்டு வருகின்றன.
இந்த பணிகளுக்கு ராட்சத இயந்திரங்கள், மணல் அள்ளும் இயந்திரங்கள், ரோடு ரோலர்கள் தேவை. நீண்ட தூரங்களுக்கு இந்த வாகனங்களை சாலையில் கொண்டு சென்றால் செலவு அதிகரிக்கும். இதனால் ராட்சத டிரைலர் லாரிகளில் ஏற்றி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
கனரக இயந்திரங்களை கொண்டு செல்லும் போது உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கொண்டு செல்ல வேண்டும், கனரக இயந்திரங்களை இரும்பு சங்கிலி, இரும்பு பட்டை கொண்டு பிணைக்கப்பட்டு நான்கு புறமும் எச்சரிக்கை சிவப்பு கொடிகளும் கட்டப்பட்டு மிதமான வேகத்தில் இயக்க வேண்டும்.
ஆனால் நடைமுறையில் இது எதுவும் பின்பற்றபடாமல் ஆபத்தான முறையில் இயந்திரங்கள் கொண்டு செல்வதால் மற்ற சிறிய ரக வாகன ஓட்டிள் அச்சத்தில் உள்ளனர்.
நேற்று நான்கு வழிச்சாலையில் திருப்பாச்சேத்தி டோல்கேட் அருகே ராட்சத கனரக இயந்திரத்தை டிரைலர் லாரியில் எந்த வித பாதுகாப்பும் இன்றி ஏற்றி சென்றதை மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பார்த்து சென்றனர்.