/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராம உதவியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
கிராம உதவியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 13, 2024 11:43 PM

சிவகங்கை: கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை சம்பளம் வழங்க கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் சேவுகமூர்த்தி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் அப்துல் பாஷா துவக்கி வைத்தார். சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில், ஓய்வு பெற்ற ஊழியர் சங்க நிர்வாகி சங்கரசுப்பிரமணியன் பங்கேற்றனர்.
மாநில அளவில் 2,299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் 25 சதவீத பணி நியமனம் செய்ய வேண்டும்.
கிராம உதவியாளர்களை கிராம நிர்வாக பணியை தவிர்த்து, வேறு பணிகளை வழங்கக்கூடாது உட்பட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட பொருளார் சண்முகவள்ளி நன்றி கூறினார்.