/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் கடை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
/
ரேஷன் கடை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 22, 2024 04:54 AM

காரைக்குடி: சாக்கோட்டை அருகே உள்ள சுட்டிநெல்லிபட்டியில் பகுதி நேர ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் மற்றும் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாக்கோட்டை ஒன்றியம் சாக்கவயலுக்குட்பட்ட சுட்டிநெல்லிப்பட்டி கிராமமானது தனித்தீவாக காட்சியளிக்கிறது. 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மாத்துார் சுட்டி நெல்லிப்பட்டி தரைப்பாலம் மண் மேவி காணாமல் போனதால் ஆண்டுதோறும், மழைக்காலங்களில் மாத்துார் சாலையை கடக்க முடியாமல் மக்களும் வாகன ஓட்டிகளும் திணறி வருகின்றனர். தவிர, இக்கிராமத்தில் அங்கன்வாடி மையம் ரேஷன் கடை இல்லாததால் மக்கள் பலமைல் துாரம் செல்ல வேண்டியுள்ளது.தங்கள் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.