/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தடுப்புச்சுவர் கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
/
தடுப்புச்சுவர் கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : மார் 22, 2024 04:52 AM
மானாமதுரை: மானாமதுரை வழியாக செல்லும் வைகை கால்வாயில்  தடுப்பு சுவர் கட்டுவதற்கு 4 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை, மேலப்பசலை,சங்கமங்களம்,ஆதனுார் ஆகிய 4  கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்த கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு மானாமதுரை வைகை ஆற்றிலிருந்து மானாமதுரை நகர் பகுதி வழியாக கால்வாய் செல்கிறது.
மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே கால்வாய் ஓரமாக அமைந்துள்ள தனியார்  இடத்தில் வங்கி கட்டடம் மற்றும் கோர்ட்  செயல்பட்டு வருகிறது.இக் கட்டட உரிமையாளர் கால்வாய் ஓரமாக தடுப்புச் சுவர் கட்டுவதற்கான பணிகளை நேற்று துவக்கினார்.
அப்போது மேற்கண்ட 4 கிராமங்களை சேர்ந்தவர்கள் தடுப்புச் சுவர் கட்டும் இடம் கால்வாய்க்கு சொந்தமான இடம் என்பதால் இங்கு தடுப்பு சுவர் கட்டக்கூடாது எனவும், இங்கு தடுப்புச் சுவர் கட்டினால் வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் செல்வது தடைபடும் எனக்கூறி தடுத்தனர்.
அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் முடிந்த பிறகு வருவாய்த் துறையினர் மூலம் சர்வேயர்களை கொண்டு அளவீடு  செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

