/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுகாதார நிலைய கட்டடம் புதுப்பிக்க கிராமத்தினர் கோரிக்கை
/
சுகாதார நிலைய கட்டடம் புதுப்பிக்க கிராமத்தினர் கோரிக்கை
சுகாதார நிலைய கட்டடம் புதுப்பிக்க கிராமத்தினர் கோரிக்கை
சுகாதார நிலைய கட்டடம் புதுப்பிக்க கிராமத்தினர் கோரிக்கை
ADDED : ஜூன் 15, 2024 06:48 AM
கீழச்சிவல்பட்டி : திருப்புத்துார் ஒன்றியம் சிறுகூடல்பட்டியில் சேதமடைந்துள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தை புதுப்பிக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.
சிறுகூடல்பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு தினசரி கர்ப்பிணிகள் பரிசோதனைக்கு வருகின்றனர். லேசான உடல்நலக்குறைவு போன்றவற்றிற்கும் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு தடுப்பூசி, சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சுகாதாரநிலையக் கட்டடம் கட்டப்பட்டு 25 ஆண்டுகளாகிவிட்டதால் தற்போது சேதமடைந்து வருகிறது. அண்மையில் பெய்த மழையில் கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.
இங்கு மக்கள் வந்து செல்ல அச்சப்படுகின்றனர். செவிலியர்களும் பணியாற்ற தயங்குகின்றனர். இதனால் கட்டடத்தை புதுப்பிக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.