ADDED : ஜூலை 07, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் அருகே விராமதியில் மந்தையம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தினர். காளைகளை பிடிக்க முயன்றபோது காளை முட்டியதில் 5 பேர் காயமுற்றனர்.
இதில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தடையை மீறி நடத்தியதாக கிராமத்தை சேர்ந்த 5 பேர் மீது கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.