/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் சீதளி குளத்திற்கு நீர்வரத்து ரூ 3.7 கோடியில் கால்வாய் புனரமைப்பு
/
திருப்புத்துார் சீதளி குளத்திற்கு நீர்வரத்து ரூ 3.7 கோடியில் கால்வாய் புனரமைப்பு
திருப்புத்துார் சீதளி குளத்திற்கு நீர்வரத்து ரூ 3.7 கோடியில் கால்வாய் புனரமைப்பு
திருப்புத்துார் சீதளி குளத்திற்கு நீர்வரத்து ரூ 3.7 கோடியில் கால்வாய் புனரமைப்பு
ADDED : ஜூன் 23, 2024 03:50 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் சீதளிக் குளத்திற்கு புனரமைக்கப்பட்ட வாய்க்கால் மூலம் நீர்வரத்து துவங்கியது.
திருப்புத்துார் தெப்பக்குளமான சீதளி குளத்திற்கு பெரியகண்மாயிலிருந்து நீர்வரத்து உள்ளது. பல ஆண்டுகளாக கண்மாய் பெருகாததால் வரத்துக்கால்வாய் பராமரிப்பின்றி துார்ந்து நீர்வரத்து பாதிக்கப்பட்டது. தெப்பக்குளத்திற்கான வரத்துக்கால்வாய்களை சீரமைக்க பொதுமக்கள் கோரினர்.
பேரூராட்சி தரப்பில் வரத்துக்கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்ற திட்டமிடப்பட்டது.சிறப்பு நிதியின் கீழ் 3.75 கோடி மதிப்பில் பணிகள் துவங்கின. பெரிய கண்மாய் நடுமடையிலிருந்து புதிய கால்வாய் அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவேறியுள்ளது.
இந்நிலையில் கோடை வெப்பத்தால் சீதளிக்குளத்தில் நீர் மட்டம் குறைந்தது. அண்மையில் பெய்த மழையால் கண்மாயில் ஓரளவு நீர் சேர்ந்தது. புனரமைக்கப்பட்ட புதிய கால்வாயில் வெள்ளோட்டமாக நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சீதளி குளத்திற்கு நீர் வரத்து துவங்கி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இருப்பினும் சில இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.
பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன் கூறுகையில், 'நகரின் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க சீதளிக்குளத்தில் நீர் பெருக வேண்டியது அவசியமானது. அதனால் அதற்கு முக்கியத்துவம் தரப்பட்டு வாய்க்கால் புனரமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இணைக்கப்படாமல் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். தொடர்ந்து சேங்கை ஊரணிக்கும் நீர்வரத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.