ADDED : ஜூலை 31, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : மதுரை- - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் மணலுாரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணவன் கண் முன்னே மனைவி பலியானார்.
மணலுாரைச் சேர்ந்தவர் லட்சுமணன் 50, அவரது மனைவி முருகேஸ்வரி 45, இருவரும் நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு மணலுாரில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே முருகேஸ்வரி உயிரிழந்தார், லட்சுமணன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.