ADDED : ஜூன் 24, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : காளையார்கோவில் அருகே நெடுங்குளத்தை சேர்ந்தவர் கோயில் பூஜாரி காளிமுத்தன்.
இவர் ஜூன் 17ம் தேதி மணி பர்சை நெடுங்குளத்தில் உள்ள மூக்கரை விநாயகர் கோயிலில் வைத்து விட்டு வெளியேசென்றார். திரும்பி வந்த பார்த்த போது கோயிலில் வைத்திருந்த மணி பர்சை காணவில்லை.
இது குறித்து பூஜாரி காளிமுத்தன் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.
எஸ்.ஐ., குகன் கோயிலுக்கு சென்று சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தார். அப்போது ஒரு பெண் மணி பர்சை திருடி செல்வதும், உண்டியலை திறக்க முற்படுவதும் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக பணக்கரையை சேர்ந்த கவுசல்யாவை 27, போலீசார் கைது செய்தனர்.