ADDED : ஆக 22, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மதகுபட்டி அழகர் மனைவி பாண்டியம்மாள் 52. இவர் மதகுபட்டியில் உள்ள பேக்கரியில் பணிபுரிகிறார். நேற்று காலை 6:20 மணிக்கு பாண்டியம்மாள் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பேக்கரிக்கு வேலைக்கு சென்றார்.
அப்போது திருமாஞ்சோலையை சேர்ந்த சாமிநாதன் மகன் பாண்டி 29 ஓட்டிவந்த டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து பாண்டியம்மாள் மீது மோதியது. இதில் பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.