ADDED : ஜூலை 01, 2024 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
திருப்புத்துார் அருகே கருகுடி பிரவீன் மனைவி திவ்யா. ஒன்றரை வயதில்ஆண் குழந்தை உள்ளது. கடந்த மே 9ம் தேதி கணவன், மனைவிக்குள்ஏற்பட்ட பிரச்னையில் திவ்யாவை அவரது கணவர், மாமனார், மாமியார் வீட்டை விட்டு வெளியே தள்ளியதாக நாச்சியார்புரம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அவர்களை அழைத்து விசாரிக்காமல் சமரசமாக செல்ல வேண்டும். இல்லாவிடில் உன்மீதும் வழக்கு போடுவோம் எனக்கூறி திவ்யாவை மிரட்டியதாக கூறுகிறார்.
அச்சமடைந்த அவர் நேற்று மதியம் 3:00 மணிக்கு சிவகங்கையில்கலெக்டர் கார் முன் தரையில் அமர்ந்து குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்ணை, கலெக்டரிடம் அழைத்து சென்றனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்ததால், அப்பெண் திரும்பி சென்றார்.