/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மகளிர் சேமிப்பு பத்திரம் அஞ்சலகங்களில் ஏற்பாடு
/
மகளிர் சேமிப்பு பத்திரம் அஞ்சலகங்களில் ஏற்பாடு
ADDED : மார் 07, 2025 08:06 AM
தேவகோட்டை : மத்திய அரசு மகளிருக்காக சேமிப்பு பத்திரம் பெற்று சேமிப்பை ஊக்கப்படுத்த மகிளா சம்மன் சேமிப்பு பத்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் சேர அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியது: பிறந்த குழந்தை முதல் வயது முதிர்ந்தவர் வரை உள்ள அனைத்து தரப்பு மகளிரும் பயனடையும் வகையில் மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் என்ற கூடுதல் வட்டியுடன் கூடிய சிறப்பான திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மார்ச் 31 ல் முடிவடைகிறது. இந்த மாதத்திற்குள் மகளிர் ரூ. ஆயிரம் முதல் இரண்டு லட்சம் வரை செலுத்தி பத்திரம் வாங்கி சேமிக்கலாம். இரண்டு ஆண்டு முடிவில் வட்டி தொகையுடன் பெற்றுக் கொள்ளலாம். மேலும் சிறப்பு வசதியாக நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு மகிளா சேமிப்பு பத்திரம் வாங்க அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்களும் மகளிர் தின பரிசாக சேமிப்பு பத்திரங்கள் வாங்கி வீட்டில் உள்ள பெண்களுக்கு அன்பளிப்பாக வழங்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.