/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சூப்பர்வைசர்களை கண்டித்து பணியாளர்கள் போராட்டம்
/
சூப்பர்வைசர்களை கண்டித்து பணியாளர்கள் போராட்டம்
ADDED : மே 31, 2024 06:21 AM

காரைக்குடி : காரைக்குடி நகராட்சியில் சூப்பர்வைசர்கள் தரைக்குறைவாக பேசியதாகக் கூறி துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, 120 நிரந்தர தொழிலாளர்களும் 200 ஒப்பந்த தொழிலாளர்களும் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் பணியாளர்களை சூப்பர்வைசர்கள் மனோஜ் மற்றும் துரைசிங்கம் ஆகியோர் தரக்குறைவாகவும் தகாத வார்த்தைகளால் பேசி வருவதாக புகார் எழுந்தது,
நேற்று காலை, ஒப்பந்ததுப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர்.