ADDED : மே 29, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : காளையார்கோவில் பஸ் ஸ்டாண்டில் ஏவிகே கிளினிக் மற்றும் நகர் வர்த்தக சங்கம் ரோட்டரி கிளப் ஆப் காளையார்கோவில் சுப்ரீம் இணைந்து பொதுமக்களுக்கான உலக அவசர சிகிச்சை தினத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
நகர் வர்த்தக சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் காளையார்கோவில் சுப்ரீம் தலைவர் ஜேம்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் ஜான் போஸ்கோ, முத்துசாமி, முன்னாள் செயலாளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். டாக்டர் சேகர் வேளாணி முதலுதவி குறித்து விளக்கம் அளித்தார். நகர் வர்த்தக சங்க முன்னாள் செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.