/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளைஞர் அடித்துக் கொலை இரு சிறார்கள், 3 பேர் கைது
/
இளைஞர் அடித்துக் கொலை இரு சிறார்கள், 3 பேர் கைது
ADDED : மார் 07, 2025 01:19 AM
சிவகங்கை:இளைஞரை அடித்துக் கொலை செய்த சிறுவர்கள் இருவர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே விசாலயைன்கோட்டையை சேர்ந்தவர் மாதங்கண், 24; காளையார்கோவில் அருகே கருங்குளம் தோட்டத்தில் வேலை செய்தார். நேற்று முன்தினம், அமராவதி புதுார் அருகே கல்லுப்பட்டி மதுக்கடையில் மது அருந்தினார்.
அதே தோட்டத்தில் பணிபுரியும் அமராவதி புதுார் நாச்சியப்பன், 24, அங்கு வந்து, தோட்டத்தில் காணாமல் போன ஆடு குறித்து மாதங்கண்ணிடம் கேட்டுள்ளார். மாதங்கண் தனக்கு எதுவும் தெரியாது என, கூறியுள்ளார்.
நம்பாத நாச்சியப்பன், தன் நண்பர்களான இரண்டு 17 வயது சிறுவர்களுடன் மாதங்கண்ணை டூ - வீலரில் அழைத்துக்கொண்டு, கருங்குளத்தில் உள்ள தோட்டத்திற்கு வந்தார். தோட்டத்தில் இருந்த கருங்குளம் குலோத்துங்கன், 34, இளமாறன், 30, நாச்சியப்பன் உள்ளிட்டோர் மாதங்கண்ணை தாக்கியுள்ளனர். இதில், மாதங்கண் உயிரிழந்தார். காளையார்கோவில் போலீசார் நாச்சியப்பன், குலோத்துங்கன், இளமாறன் மேலும் இரண்டு சிறுவர்களை கைது செய்தனர்.