/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 10 கிராம மக்கள் எதிர்ப்பு
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 10 கிராம மக்கள் எதிர்ப்பு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 10 கிராம மக்கள் எதிர்ப்பு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 10 கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : அக் 02, 2025 03:36 AM
எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே மாவட்ட எல்லையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 10 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் வெளியேறும் கழிவு நீரை அங்கிருந்து சிவகங்கை மாவட்ட எல்லையான கோணம்பட்டி புல்டாங்குட்டு பகுதிக்கு குழாய் மூலம் கொண்டுவந்து சுத்திகரிக்க முடிவுசெய்யப்பட்டது. சுத்திகரிப்பு நிலையத்திற்கு கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து ரூபாய் 6.53 கோடி செலவில் பணிகள் துவங்கியுள்ளது. இந்நிலையில் உயரமான பகுதியான அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால், அதில் கையாளப்படும் கழிவுநீர் கசிந்து, விவசாய பகுதியான எஸ்.புதூர் ஒன்றிய கிராமங்களில் கண்மாய்,குளம், போர்வெல் உள்ளிட்டவற்றில் கலக்கும் அபாயம் உள்ளதாகவும், அதனால் தண்ணீர் மாசடைந்தும், விவசாயம் பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என எஸ்.புதூர் பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதை தொடர்ந்து நேற்று 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுத்திகரிப்பு நிலையம் நடக்கும் இடத்திற்கு வந்து கோஷம் எழுப்பினர். அப்பகுதியில் நிலையத்தை அமைத்தால் ஆதார், வாக்காளர், ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.