/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எண்ணெய் பனை கன்றுக்கு 100 சதவீத மானியம் உதவி இயக்குனர் தகவல்
/
எண்ணெய் பனை கன்றுக்கு 100 சதவீத மானியம் உதவி இயக்குனர் தகவல்
எண்ணெய் பனை கன்றுக்கு 100 சதவீத மானியம் உதவி இயக்குனர் தகவல்
எண்ணெய் பனை கன்றுக்கு 100 சதவீத மானியம் உதவி இயக்குனர் தகவல்
ADDED : நவ 28, 2025 08:05 AM
சிவகங்கை: காளையார்கோவில் ஒன்றியத்தில் எண்ணெய் பனை கன்றுகள் நடவு செய்ய 100 சதவீத மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் வடிவேல் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தேசிய எண்ணெய் பனை இயக்க திட்டத்தின் கீழ் எண்ணெய் பனை காளையார்கோவில் ஒன்றியத்தில் 20 எக்டேர் வரை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 1 எக்டேருக்கு ரூ.29 ஆயிரம் மதிப்புள்ள எண்ணெய் பனை கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். ஒரு எக்டேர் நிலத்தில் 9 க்கு 9 மீட்டர் இடைவெளியில் 143 பனை கன்றுகளை நடலாம்.
இப்பனை சாகுபடியில் முதல் 4 ஆண்டிற்கு ரூ.5250 மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்வதற்கு ரூ.5250 என ஒட்டு மொத்தமாக ரூ.10,500 வரை வழங்கப்படும். பயிரிட்ட நான்கு ஆண்டுக்கு பின் பாமாயில் மரத்திற்கு எக்டேருக்கு 5 டன் மகசூல் கிடைக்கும். தொடர்ந்து 30 ஆண்டில் 30 டன்கள் வரை மகசூல் பெறலாம்.
கூடுதல் மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் காளையார்கோவில் வட்டார விவசாயிகள், தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றார்.

