/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் பெருமாள் கோயிலில் 1008 கலசாபிேஷகம் நிறைவு
/
திருப்புத்துார் பெருமாள் கோயிலில் 1008 கலசாபிேஷகம் நிறைவு
திருப்புத்துார் பெருமாள் கோயிலில் 1008 கலசாபிேஷகம் நிறைவு
திருப்புத்துார் பெருமாள் கோயிலில் 1008 கலசாபிேஷகம் நிறைவு
ADDED : ஜன 22, 2024 05:00 AM

திருப்புத்துார்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் 1008 கலசாபிஷேகம் நிறைவு பெற்றது.
இக்கோயிலில் உலக நன்மை வேண்டி இரு நாட்கள் 1008 கலசாபிஷேகம் நடந்தது. ஜன 20 மாலை 4:30 மணிக்கு சக்கரத்தாழ்வார் சன்னதி முன்பாக யாகசாலை பூர்வாங்க பூஜைகள் துவங்கின. தொடர்ந்து வெங்கடேஷ் பட்டாச்சார்யர் தலைமையில் 1008 கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் துவங்கின. முதலாம் கால பூஜை நிறைவுற்ற பின் பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு யாக சாலை பூஜைகள் துவங்கியது. மூல மந்திர ஹோமம் நிறைவடைந்த பின் யாக சாலையிலிருந்து 1008 கலச புனித நீரால் உற்ஸவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் யாகசாலையில் மகா பூர்ணாகுதி நடந்து பிரதான கலசம் புறப்பாடாகியது. தொடர்ந்து கோயிலை வலம் வந்து வேத கோஷங்கள் முழங்க, நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் ஒலிக்க, மூலவருக்கும், உற்ஸவருக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இரவு கற்பக விருட்சத்தில் உற்ஸவர் புறப்பாடு நடந்தது. ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள், விழாக்குழுவினர் செய்தனர்.