/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
1008 கஞ்சி கலயம் எடுத்து நேர்த்தி
/
1008 கஞ்சி கலயம் எடுத்து நேர்த்தி
ADDED : ஆக 12, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மனுக்கு, ஆடி செவ்வாயை முன்னிட்டு 1008 கஞ்சி கலயம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும், ஆடி செவ்வாயை முன்னிட்டு ஓம் சஷ்டி சேவா சார்பில், பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவர். அதன் அடிப்படையில் நேற்று காரைக்குடி முத்தாளம்மன் கோயிலில் இருந்து ஓம் சஷ்டி சேவா பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்து, கொப்புடைய நாயகி அம்மன் கோயில், செகண்ட் பீட் செக்காலை ரோடு வழியாக முத்துமாரியம்மன் கோயிலில் செலுத்தினர்.