/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தீபாவளிக்கு மருத்துவம், போலீஸ், தீயணைப்பு புகாருக்கு 108 ஆம்புலன்ஸ்

ADDED : அக் 18, 2025 03:59 AM
சிவகங்கை: தீபாவளிக்காக மருத்துவம், போலீஸ், தீயணைப்பு துறை சார்ந்த அழைப்பிற்கு 108 ஐ அழைத்தால் உதவிகள் தேடி வரும் என தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுகிறது. இதற்காக மக்கள் அழைக்கும் 108 என்ற எண் அனைத்து சேவைக்காகவும் ஒருங் கிணைத்துள்ளனர். மருத்துவம், போலீஸ், தீயணைப்பு துறை சார்ந்த புகார்களை ஒரே எண்ணான 108 யை அழைக்கலாம்.
தீபாவளிக்காக புதுக்கோட்டையில் 37, சிவ கங்கையில் 32, ராமநாத புரத்தில் 29 என 98 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்துள்ளனர். இது தவிர தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அதிக விபத்து ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து, அங்கு நிறுத்துவதற்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.
நகர் பகுதியில் 7 முதல் 8 நிமிடங்களில் ஆம் புலன்ஸ் வந்துவிடும். ஆங்காங்கே 108 ஆம் புலன்ஸ் நிறுத்துவதால், இன்னும் 5 முதல் 7 நிமிடத்திற்குள் சென்றுசேரலாம் என தெரிவித்தனர்.