/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையாத்தங்குடியில் இன்று 108 கலசாபிஷேகம்
/
இளையாத்தங்குடியில் இன்று 108 கலசாபிஷேகம்
ADDED : ஆக 26, 2025 11:56 PM
கீழச்சிவல்பட்டி; திருப்புத்துார் ஒன்றியம் இளையாத்தங்குடி கைலாச விநாயகர் கோயிலில் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு இன்று 108 கலசாபிஷேகம் நடைபெறும்.
இளையாத்தங்குடி கோயில் ஒக்கூர் நகரத்தாரின் கைலாச விநாயகர் கோயிலில் செப். 27 காலை 6:00 மணிக்கு மூலவர் வெள்ளி திருவாச்சி அங்கி, தந்தத்துடன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து பெரிய கோயிலிலிருந்து உற்ஸவர் புறப்பாடும், காலை 9:05 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, காலை 9:30 மணிக்கு அஷ்டோத்திர ஸ்தகலாச பூஜை,வேதிகா அர்ச்சனை, காலை 10:00 மணிக்கு கணபதி ேஹாமம், சோடச கணபதி மூல மந்திர ேஹாமம், காலை 11:00 மணிக்கு பிரம்மசாரி பூஜை, கோபூஜை நடைபெறும்.
பூர்ணாகுதி, கடம் புறப்பாடு, 108 கலசாபிேஷகம், தீபாராதனை நடைபெறும். மாலை 4:00 மணிக்கு விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார். மாலை 4:30 மணிக்கு பல்நோக்கு பயன்பாட்டு மண்டபம் திறப்பு விழாவும், மாலை 6:30 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதி உலாவும் நடைபெறும்.