தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ 10ம் வகுப்பு தமிழ் தேர்வு திருக்குறள் வினாவில் குளறுபடி

 10ம் வகுப்பு தமிழ் தேர்வு திருக்குறள் வினாவில் குளறுபடி

 10ம் வகுப்பு தமிழ் தேர்வு திருக்குறள் வினாவில் குளறுபடி


ADDED : மார் 15, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 06:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி: பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு தமிழ் பாடத்தில் திருக்குறள் எழுதுவதில் மாணவர்களை குழப்பும் வகையில் கேள்வி அமைந்துள்ளதால் ' உலகு' என முடியும் திருக்குறள் எழுதி இருந்தாலே முழுமதிப்பெண் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சிங்கம்புணரியில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கா.சேவுகமூர்த்தி தெரிவித்ததாவது:

10ம் வகுப்பு தமிழ்மொழிப்பாடத்திற்கான கேள்வி எண் 21, திருக்குறள் பாடல் எழுதும் 2 மதிப்பெண் வினா ஆகும். அதில் 'உலகு' என முடியும் திருக்குறளை எழுதுக என உள்ளது. இதனால் நன்றாகப்படிக்கும் மாணவர்கள் கூட திருக்குறளில் உள்ள 'உலகு 'என முடியும் பல்வேறு குறளில் ஏதேனும் ஒன்றை பதில் ஆக எழுதியுள்ளனர்.

திருக்குறள் மனப்பாடப்பாடலை எழுதுக என்றோ அல்லது குறிப்பிட்ட அதிகாரத்தில் உள்ள 'உலகு ' என முடியும் பாடலை எழுதுக என்றோ வினாத்தாள் முறையாக கேட்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் திருக்குறளில் உள்ள 'உலகு' என்று முடியும் குறளையும் பலர் பதிலாக எழுதியுள்ளனர். வினாமுறை அடிப்படையில்' உலகு' என முடியும் எந்த திருக்குறளையும் எழுதி இருந்தாலே மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.மாணவர்களின் முழுமையான மதிப்பெண் சதவீதம் குறையாதபடி அமைய அரசு விடைத்தாள் மைய ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us