/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் 12,144 நாய்களுக்கு தடுப்பூசி
/
சிவகங்கையில் 12,144 நாய்களுக்கு தடுப்பூசி
ADDED : டிச 01, 2025 06:37 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அளவில் தெரு, வீடுகளில் வளர்க்கப்படும் சமூக நாய்களில் 12,144 க்கு ஏ.ஆர்.வி., தடுப்பூசி போட்டுள்ளனர்.
காரைக்குடி மாநகராட்சியில் நாய்களுக்கான கருத்தடை மையம் அமைத்து அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். திருப்புத்துார் கால்நடை மருத்துவமனை, தேவகோட்டை கால்நடை மருந்தகத்தில் கருத்தடை மையம் கட்டப்பட்டு, அதற்கான கருவிகள் வந்ததும் துவக்கப்படும்.
சிவகங்கை அருகே முடிகண்டத்தில் 50 சென்ட் நிலத்தில் கால்நடை கிளை நிலையத்துடன், கருத்தடை மையம் அமைக்கப்படும்.
தெருக்களில் திரியும் நாய்களுக்கு கால்நடை மருத்துவர்கள் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
வீடுகளில் வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு சென்ற தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

