/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வங்கி மூலம் ரூ.12,450 கோடி கடன் ஆலோசனை கூட்டத்தில் தகவல்
/
வங்கி மூலம் ரூ.12,450 கோடி கடன் ஆலோசனை கூட்டத்தில் தகவல்
வங்கி மூலம் ரூ.12,450 கோடி கடன் ஆலோசனை கூட்டத்தில் தகவல்
வங்கி மூலம் ரூ.12,450 கோடி கடன் ஆலோசனை கூட்டத்தில் தகவல்
ADDED : பிப் 16, 2024 05:11 AM
சிவகங்கை: மாவட்ட அளவில் தேசிய வங்கி கிளைகளின் மூலம் நடப்பாண்டு ரூ.12,450 கோடி தொழில், விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக சிவகங்கையில் நடந்த வங்கி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் வரவேற்றார். மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, மாவட்ட தொழில் மைய மேலாளர் கண்ணன், தாட்கோ மேலாளர் முத்துசெல்வி, வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் தலைவர் ஆதித்யா மேனன் பங்கேற்றனர்.
மாவட்ட அளவில் உள்ள 26 தேசிய வங்கிகளின் கீழ் செயல்படும் 283 வங்கி கிளைகள் மூலம் கல்வி, விவசாயம், சிறு, குறுந்தொழில் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு (2023--24) இந்த வங்கிகளின் மூலம் ரூ.12,450 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இது வரை ரூ.9,400 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.