ADDED : ஏப் 25, 2025 06:37 AM
சிங்கம்புணரி: பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு சிங்கம்புணரியில் வைக்கப்பட்டிருந்த அஞ்சலி பேனரை போலீசார் அகற்றியதால் ஹிந்து அமைப்புகள் மறியலில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தை கண்டித்தும், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் சிங்கம்புணரியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அனுமதி இன்றி வைக்கப்பட்டதாக கூறி இப்பேனரை போலீசார் நேற்று அகற்றினர். இதை கண்டித்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கலைந்து போக கூறினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் மாநில பொறுப்பாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

