/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விவேகானந்தர் சிகாகோ உரை 131 வது ஆண்டு நிறைவு விழா
/
விவேகானந்தர் சிகாகோ உரை 131 வது ஆண்டு நிறைவு விழா
ADDED : செப் 21, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் விவேகானந்தரின் சிகாகோ உரையின் 131 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கான கருத்தரங்கம் நடந்தது. யத்தீஸ்வரி சாரதேஸ்வரி பிரியா அம்பா, ராமகிருஷ்ண பிரியா அம்பா தலைமையேற்றனர். கல்லூரி முதல்வர் சிவசங்கரி ரம்யா வரவேற்றார்.
இதில் தஞ்சை ராமகிருஷ்ண மடம் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை குறித்து பேசினார். ஒய்ட்ரீ இணை நிறுவன செல்வ முத்துக்குமார் பேசினார். கல்லூரி இயக்குனர் மீனலோச்சனி நன்றி கூறினார்.