/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளைஞர் கொலையில் 17 வயது சிறுவன் கைது
/
இளைஞர் கொலையில் 17 வயது சிறுவன் கைது
ADDED : ஜூலை 08, 2025 10:21 PM
சிவகங்கை; சிவகங்கை தமறாக்கி தெற்கு செல்லச்சாமி மகன் மனோஜ்பிரபு ஜூலை 4 இரவு நண்பர்கள் ஹரிஹரன், அஜித்துடன் டூவீலரில் இடையமேலுாரில் நடந்த இன்னிசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பினார்.
புதுப்பட்டி அருகே நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த கும்பல் ஒன்று மனோஜ் பிரபு ஓட்டிய டூவீலரில் மோதியது.
காரில் இருந்து இறங்கிய கும்பல் மனோஜ்பிரபுவை வெட்டி படுகொலை செய்தனர்.
சிவகங்கை போலீசார் இந்த கொலை தொடர்பாக தமறாக்கி தென்னரசு மகன் கார் டிரைவர் வசந்தகுமார் 21, வேலாங்கப்பட்டி சோணை மகன் சூர்யாவை கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த தமறாக்கி பாண்டி மகன்கள் அபிமன்யு மற்றும் ஹரிஹரனை நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.

