/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 12 முகாமில் 17,000 பேர் பயன்
/
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 12 முகாமில் 17,000 பேர் பயன்
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 12 முகாமில் 17,000 பேர் பயன்
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 12 முகாமில் 17,000 பேர் பயன்
ADDED : அக் 27, 2025 04:19 AM
சிவகங்கை: மாவட்ட அளவில் இது வரை நடந்த 12 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் மூலம் மாற்றுத்திறனாளிகள் உட்பட 17 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட அளவில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 39 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாரத்தில் சனி தோறும் இம்முகாம் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இம்மாவட்டத்தில் இது வரை 12 முகாம்கள் வரை நடத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் 2,500 மாற்றுத்திறனாளிகள் உட்பட 17 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இம்முகாம்கள் நடக்கும் 10 மாவட்டங்களில் சிறந்த பட்டியலில் சிவகங்கையும் இடம் பிடித்துள்ளது. இம்முகாம் மூலம் ரூ.3 ஆயிரம் மதிப்பீட்டில் மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்படுகிறது.