/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ஆசிரியர்கள் சாலை மறியல் 193 பேர் கைது
/
சிவகங்கையில் ஆசிரியர்கள் சாலை மறியல் 193 பேர் கைது
சிவகங்கையில் ஆசிரியர்கள் சாலை மறியல் 193 பேர் கைது
சிவகங்கையில் ஆசிரியர்கள் சாலை மறியல் 193 பேர் கைது
ADDED : ஜூலை 17, 2025 11:24 PM

சிவகங்கை: பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட தொடக்க பள்ளி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை (டிட்டோஜாக்) குழு சார்பில் 193 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இதனால், மாவட்ட அளவில் 1,622 ஆசிரியர்கள் பள்ளியை புறக்கணித்தனர்.
சிவகங்கையில் நடந்த மறியல் போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சகாயதைனேஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி அன்பரசு பிரபாகர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜான்பீட்டர், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சேசுராஜ், ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் டேவிட் அந்தோணிராஜ், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டு நடவடிக்கை குழு மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ் மறியலை துவக்கி வைத்தார். மறியலில் ஈடுபட்ட 117 ஆசிரியர், 76 ஆசிரியைகள் என 193 பேர்களை கைது செய்தனர்.
1,622 பேர் பணி புறக்கணிப்பு
சிவகங்கை கல்வி மாவட்ட அளவில் 575 பள்ளிகளில் பணிபுரியும் 1,779 ஆசிரியர்களில் 751 பேர் பணிபுரிந்தனர். 132 பேர் விடுப்பில் சென்றனர். 896 பேர் பணியை புறக்கணித்தனர். தேவகோட்டை கல்வி மாவட்டஅளவில் 431 பள்ளிகளில் 1,824 ஆசிரியர்களில் 1008 பேர் பணிபுரிந்தனர். 90 பேர் விடுப்பில் சென்ற நிலையில் 726 பேர் நேற்று பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.