ADDED : அக் 15, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; தேவகோட்டை ராம்நகரில் கடை நடத்தி வருபவர் வெங்கடாசலம். 70. இவரிடம், காரைக்குடியில் வேலை செய்து வந்த வடமாநில இளைஞர்கள் இருவர் தங்களிடம் 2 கிலோ பழங்கால தங்க மாலை இருப்பதாக கூறி, போலி தங்க நகைகளை கொடுத்து, ரூ.20 லட்சம் ஏமாற்றிச் சென்றனர்.
காரைக்குடி, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மோசடி செய்தவர்களுக்கு அலைபேசி உட்பட பல்வேறு உதவி செய்த மைசூரைச் சேர்ந்த சஞ்சய் 29, மாண்டியாவைச் சேர்ந்த தீபக் ரத்தோர் 26 இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.