ADDED : ஏப் 01, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை:மானாமதுரை சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட தயா நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டில் 40 பவுன் திருடு போனது. கடந்த வாரம் சிப்காட் அழகு நாச்சியார் புரத்தில் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் குமார் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகை மற்றும் ரூ. 70 ஆயிரம் திருடப்பட்டது.
இவ் வழக்குகள் குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வந்த நிலையில் இதில் தொடர்புடைய மானாமதுரை அருகே உள்ள மானம்பாக்கி கிராமத்தை சேர்ந்த குகன் 32, வேலூர் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் 34, இருவரை கைது செய்தனர்.
