/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சோழபுரத்தில் 2 கார், டூவீலர் விபத்து: 5 பேர் காயம்
/
சோழபுரத்தில் 2 கார், டூவீலர் விபத்து: 5 பேர் காயம்
சோழபுரத்தில் 2 கார், டூவீலர் விபத்து: 5 பேர் காயம்
சோழபுரத்தில் 2 கார், டூவீலர் விபத்து: 5 பேர் காயம்
ADDED : ஆக 30, 2025 11:45 PM
சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரத்தில் இரண்டு கார்கள், டூவீலர் மோதிய விபத்தில் 5 பேர் காயமுற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் திருமுருகன் 54. இவர் காரில் குடும்பத் தாருடன் பிள்ளையார்பட்டி சென்று, பரமக்குடி நோக்கி திரும்பினர். நேற்று மதியம் 1:00 மணிக்கு இவர்களது கார் சோழபுரத்தில் சென்றபோது, நாலுகோட்டையில் இருந்து மெயின்ரோட்டிற்கு சுப்பிரமணி 32, ராஜா 39, காமேஸ்வரன் ஆகியோர் சென்ற காருடன் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்தவிபத்தில் இரு கார்களும் நிலை தடுமாறி ரோட்டில் சென்ற டூவீலரில் மோதி, பள்ளத்தில் இரு கார்களும் கவிழ்ந்தது. இதில், டூவீலரில் சென்ற சோழபுரம் செல்லப்பாண்டி 27, காயமுற்றார்.
இந்த விபத்தில் சுப்பிரமணி, காமேஸ்வரன், செல்லப்பாண்டி, ராஜா, திருமுருகன் ஆகிய 5 பேர்களும் பலத்த காயமுற்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.

