/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இட நெருக்கடியில் மாணவர்கள் 5 வகுப்புகளுக்கு 2 வகுப்பறை
/
இட நெருக்கடியில் மாணவர்கள் 5 வகுப்புகளுக்கு 2 வகுப்பறை
இட நெருக்கடியில் மாணவர்கள் 5 வகுப்புகளுக்கு 2 வகுப்பறை
இட நெருக்கடியில் மாணவர்கள் 5 வகுப்புகளுக்கு 2 வகுப்பறை
ADDED : டிச 16, 2025 05:38 AM
சிவகங்கை: காளையார்கோவில் அருகே பெரியகண்ணனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இட நெருக்கடியில் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது பெரிய கண்ணனுார் கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை 46 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு இரண்டு வகுப்பறை தான் உள்ளது. 1 முதல் 3 வகுப்பு வரை ஒரு வகுப்பறையிலும், 4ம், 5ம் வகுப்பு மற்றொரு அறையிலும் நடக்கிறது.
அதேபோல் 5 வகுப்புக்கும் தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் தான் பணியில் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் தான் 5 வகுப்புக்கும் பாடம் நடத்தும் சூழல் உள்ளது. மாணவர்களுக்கான உணவு வழங்குவதற்கு சமைப்பதற்கு சமையலறை கட்டடம் கிடையாது. சேதமடைந்த கட்டடத்தில் சமைக்கும் சூழல் உள்ளது.
பள்ளியில் கட்டட வசதி குறைவாக இருப்பதாலும் இடநெருக்கடியில் படிப்ப தாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்புவதற்கு தயக்கம் காட்டி அருகில் உள்ள பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
எனவே பள்ளிகல்வித்துறை நிர்வாகம் பெரிய கண்ணனுாரில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடமும், சமையலறை கட்டடம் கட்டவும், கூடுதல் ஆசிரியர்களை பணி அமர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

