ADDED : ஜன 11, 2025 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி :  சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் நடந்த இளவட்ட மஞ்சுவிரட்டில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இங்குள்ள சிறை மீட்ட ஐயனார், செகுட்டு ஐயனார் கோயில் மார்கழிபூஜையை முன்னிட்டு  நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. கோயில் காளைகள் உள்ளிட்ட அனைத்து காளைகளுக்கும்வேட்டி, துண்டு வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
கோயில் மாடுகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன.  தொடர்ந்து அனைத்து தொழுமாடுகளும், கட்டுமாடுகளும் அவிழ்த்து விடப்பட்டது.  இதில் மாடுகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

