/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடுத்தடுத்து வாகனங்கள் மோதலில் 20 பேர் படுகாயம்
/
அடுத்தடுத்து வாகனங்கள் மோதலில் 20 பேர் படுகாயம்
ADDED : அக் 15, 2024 07:01 AM

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நான்கு வழிச்சாலையில் மேலப்பசலை மேம்பாலத்தில் நேற்று சாரல் மழை பெய்தது. காலை 8:30 மணியளவில், பரமக்குடியிலிருந்து மதுரைக்கு கோழிகளை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது, ராமேஸ்வரத்திலிருந்து மதுரை சென்ற அரசு விரைவு பஸ், மேம்பாலத்தில் கவிழ்ந்து கிடந்த வாகனத்தின் மீது மோதி நின்றது. அடுத்த சில வினாடிகளில், விரைவு பஸ்சிற்கு பின்னால், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியிலிருந்து வந்த கடற்படை வாகனம் ஒன்றும், சிவகங்கை சென்ற காரும் பஸ் மீது அடுத்தடுத்து மோதின.
இதில், காயமடைந்த ஐந்து கடற்படை வீரர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மானாமதுரையிலிருந்து ஆம்புலன்ஸ்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டன.
அரசு விரைவு பஸ், கார், கோழிகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் வந்த 15 பேர், மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்துகளால் நான்குவழி சாலையில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.