ADDED : பிப் 15, 2024 05:14 AM

சிவகங்கை: சிவகங்கை சந்தையில் மருத்துவ குணமுடைய கொடுக்காய்புளி கிலோ ரூ.240க்கு விற்பனையானது.
அனைத்து பகுதிகளிலும் சிறுவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது கொடுக்காய்புளி.வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் கொப்புளம், உஷ்ணநோய், வயிற்று வலி போன்றவைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்துகின்றனர்.இலவசமாக கிடைத்த இந்த காய் இன்று கடைகளில் கிலோ ரூ.200 லிருந்து 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
சிவகங்கையில் வியாபாரிகள் கூறுகையில், சிவகங்கையில் தள்ளுவண்டி கடைகளில் தற்போது கொடுக்காய்புளி விற்பனை சூடு பிடித்துள்ளது. அனைத்து மக்களும் வாங்கிச் செல்கின்றனர். தற்போது சீசன் என்பதால் அதிக அளவில் வரத்துள்ளது. வரத்து சித்திரை வரை இருக்கும். சிவகங்கை மாவட்ட சந்தைகளில் தற்போது இந்த காய் விற்பனை அமோகமாக நடக்கிறது என்றனர்.
