/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோவில் இடத்தை காட்டி ரூபாய் 25 லட்சம் மோசடி
/
கோவில் இடத்தை காட்டி ரூபாய் 25 லட்சம் மோசடி
ADDED : அக் 06, 2024 01:49 AM
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி ஆனந்திமாலா, 41. விஜயகுமாரிடம் குருந்தம்பட்டுவைச் சேர்ந்த ராஜேந்திரன், காரைக்குடியைச் சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல் மற்றும் சித்ராதேவி, மேலுாரைச் சேர்ந்த பாலா ஆகியோர், காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஒரு இடத்தை விலைக்கு தருவதாக பேசினர்.
ஜார்ஜ் மைக்கேலுக்கு சொந்தமான இடம் எனக்கூறி, விஜயகுமாரிடம் 25 லட்சம் ரூபாய் பெற்றனர். மேலும், பத்திரச்செலவுக்கு 3.50 லட்சம் ரூபாயும் பெற்றனர்.
கமிஷன் தொகையாக ராஜேந்திரன், 1.50 லட்சம் ரூபாய் பெற்றார். பணத்தைப் பெற்று கொண்டு பட்டா மாறுதல் செய்யாமல் இழுத்தடிப்பு செய்ததால் விஜயகுமார் சர்வேயரிடம் விபரம் கேட்டார்.
அப்போது தான் அது, கோவில் இடம் என தெரிந்தது. இதனால், கொடுத்த பணத்தை விஜய குமார் திரும்ப கேட்டார். பணத்தை கொடுத்து விடுவதாக கூறியவர்கள், பணத்தை கொடுக்கும் வரை கார் ஒன்றை வைத்துக் கொள்ளும்படி கூறினர். எனினும், கொடுக்கவில்லை.
இதுதொடர்பாக ஆனந்திமாலா கொடுத்த புகாரின்படி ராஜேந்திரன், ஜார்ஜ் மைக்கேல், சித்ராதேவி, பாலா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.