/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாளை டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் 26,392 பேர் பங்கேற்பு
/
நாளை டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் 26,392 பேர் பங்கேற்பு
நாளை டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் 26,392 பேர் பங்கேற்பு
நாளை டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் 26,392 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 10, 2025 10:55 PM
சிவகங்கை; மாவட்ட அளவில் 99 தேர்வு மையங்களில் நாளை நடக்கும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வினை 26,392 பேர் எழுத உள்ளனர்.
தமிழக அளவில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், இளநிலை வருவாய் ஆய்வாளர் உட்பட 3,925 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இத்தேர்வினை எழுத லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு நாளை (ஜூலை 12) தமிழக அளவில் அனைத்து தேர்வு மையங்களிலும் நடக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் 9 தாலுகாவிற்குட்பட்ட பள்ளி, கல்லுாரிகள் என 99 தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு நடக்கிறது. இதில், 26 ஆயிரத்து 392 பேர் பங்கேற்று தேர்வினை எழுத உள்ளனர். இத்தேர்வினை கண்காணிக்க டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையத்திடம் இருந்து 3 அதிகாரிகள் வந்துள்ளனர். இது தவிர துணை கலெக்டர் நிலையில் 9 கண்காணிப்பு அதிகாரிகள், பறக்கும் படையினர் 11 பேர், நடமாடும் கண்காணிப்பு குழுவினர் 26 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்வர்கள் தேர்வு அறைக்குள் காலை 9:00 மணிக்குள் வந்து விட வேண்டும். காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வு நடைபெறும்.

