ADDED : ஆக 14, 2025 02:35 AM
காரைக்குடி: காரைக்குடியில் நகைக்கடை ஊழியரிடம் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த வழக்கில் மேலும் 3 வட மாநிலத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் விஜயராஜா 42. இவர் மதுரையில் உள்ள ஒரு நகைக்கடை டெஸ்டிங் சென்டரில் வேலை செய்து வந்தார். இவர் ஜூலை 4ம் தேதி இரவு ஒன்றரை கிலோ தங்க கட்டிகளுடன் காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் இறங்கி நடந்து சென்றபோது, இவரை சிலர் காரில் கடத்தி தங்க கட்டிகளை பறித்து சென்றனர்.
விஜயராஜாவுடன், வேலை செய்து வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த அபிமன்யூ என்ற மனோஜ் 38, என்பவரை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவிற்கு தப்பியோடிய மகாராஷ்டிராவை சேர்ந்த தேவ்பா 40, பிரசாத் 24, துக்காராம் 34 ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.