ADDED : செப் 29, 2024 02:50 AM
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே சின்ன சோமநாதபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி கவிதா, 44. கல்லல் கணேசன் மனைவி வசந்தி, 46.
இருவரும், 100 நாள் வேலையை முடித்துவிட்டு, நேற்று மதியம், 3:00 மணிக்கு, குருந்தம்பட்டு கல்லல்ரோட்டில் நடந்து சென்றனர்.
அப்போது, மின்னல்மற்றும் இடியுடன் மழை பெய்தது. கவிதா மற்றும் வசந்தி மீது மின்னல் தாக்கியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்லல் போலீசார் விசாரிக்கின்றனர்.
தேவக்கோட்டை தாலுகா, அனுமந்தக்குடி அருகே இலக்கமாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் மனைவி காளியம்மாள், 75.
நேற்று மதியம், 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள மணக்குடியில் அண்ணாமலை என்பவருடைய இரு ஆடுகளும் மின்னல் தாக்கி இறந்தன.