/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் 3 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் அழிப்பு
/
சிவகங்கையில் 3 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் அழிப்பு
ADDED : ஜூலை 17, 2025 11:24 PM
சிவகங்கை: சிங்கம்புணரியில் பிடிக்கப்பட்ட எரிசாராயத்தை நீதிமன்ற உத்தரவுபடி மதுவிலக்கு போலீசார் சிவகங்கையில் தீயிட்டு அழித்தனர்.
சிங்கம்புணரி அருகே குமரத்துக்குடிப்பட்டி வனப்பகுதியில் கடந்த ஆண்டு செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலையை போலீசார் கண்டறிந்து, அங்கு கேன்களில் இருந்த 3 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை கைப்பற்றி, ஆலைக்கு சீல் வைத்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் சிவகங்கை மருத்துவ கல்லுாரி பின்புறம் உள்ள பகுதியில் குழிதோண்டி எரிசாராயத்தை ஊற்றி, தீயிட்டு எரித்தனர். கூடுதல் எஸ்.பி., சுகுமாறன் தலைமையிலான மதுவிலக்கு போலீசார் இதற்கான பணிகளை செய்திருந்தனர்.

