/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தலைமை ஆசிரியர்கள் 34 பேருக்கு பதவி உயர்வு 12 சி.இ.ஓ.,க்கள் காலியிடங்களை நிரப்புவது எப்போது

ADDED : ஜூலை 11, 2025 10:18 PM
சிவகங்கை:தமிழகத்தில் 34 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 12 முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) பணியிடங்களையும் அரசு நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள், அதற்கு ஈடான பணியிடங்களில் 60 இடங்கள் காலியாக இருப்பதாக அரசு கவனத்துக்கு சென்றது. இதுதவிர மே 8, ஜூனில் 4 பேர் என 12 முதன்மை கல்வி அலுவலர்கள்(சி.இ.ஓ.,) பணி ஓய்வு பெற்று சென்றனர். அந்த காலிபணியிடங்களும் உள்ளன. மாவட்ட கல்வி அலுவலர்கள் மட்டுமே 26 பேர் பணி ஓய்வு பெற்று சென்றனர்.
புதிய கல்வி ஆண்டு துவங்கி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்பாததால் கல்வி பணிகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
34 தலைமை ஆசிரியருக்கு பதவி உயர்வு
இதையடுத்து அரசு உயர், மேல் நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் 34 பேருக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வும், மாவட்ட கல்வி அலுவலர்கள் 25 பேரை பணியிட மாற்றமும் செய்து கல்வித்துறை நேற்று உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் உடனடியாக அந்தந்த பள்ளியின் மூத்த முதுகலை, பட்டதாரி ஆசிரியரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு மாவட்ட கல்வி அலுவலராக பதவியேற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.