ADDED : டிச 01, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; காரைக்குடி அருகே கண்டனுாரில் காளி கோயில் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சாக்கோட்டை போலீசார் விசாரித்தபோது, பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியுள்ளனர். புதுவயல் அஜ்மீர் அலி 43, புதுக்கோட்டை முகைதீன் பாட்ஷா 30, மணிகண்டன், கழனிவாசல் முத்துக்குமார் 25 ஆகிய 4 பேர்களை கைது செய்து, அவர்கள் கொண்டு சென்ற 18 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.