/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நகராட்சி ஊழியருக்கு வெட்டு சிறுவன் உட்பட 4 பேர் கைது
/
நகராட்சி ஊழியருக்கு வெட்டு சிறுவன் உட்பட 4 பேர் கைது
நகராட்சி ஊழியருக்கு வெட்டு சிறுவன் உட்பட 4 பேர் கைது
நகராட்சி ஊழியருக்கு வெட்டு சிறுவன் உட்பட 4 பேர் கைது
ADDED : டிச 08, 2024 05:46 AM
மானாமதுரை: மானாமதுரை ராம்நகர் சிவாஜி மகன் ஹரி பிரசாத் 27,இவர் மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில்வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் செக்கடி அருகே வைகையாற்று பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றபோது சிலர் அரிவாளால் அவரை வெட்டிவிட்டு அலைபேசியை பறித்துச் சென்றனர்.
ஹரிபிரசாத் மானாமதுரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தொடர்புடையவர்களை தேடி வந்த நிலையில் மானாமதுரை சுந்தரபுரம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மார்க்(எ) மார்க்கண்டேயன் 19, திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த சிறுவன், சிவகங்கை மதுரைமுக்கு பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் மகன் ராஜேஷ்19, மற்றும் 16 வயது சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்தனர்.