/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
4 வழிச்சாலையில் காருடன் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள்
/
4 வழிச்சாலையில் காருடன் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள்
4 வழிச்சாலையில் காருடன் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள்
4 வழிச்சாலையில் காருடன் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 04, 2024 04:55 AM

திருப்புவனம், : மதுரை- பரமக்குடி 4 வழிச்சாலையில் விபத்து ஏற்படும் வண்ணம் நான்கு சக்கர வாகனத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கால் வைத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது.
தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பாதை வழியாக கமுதி, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், சாயல்குடி சென்று வருகின்றன.
நேற்று முன் தினம் திருப்பாச்சேத்தி டோல்கேட் அருகே நான்கு சக்கர வாகனத்தை இரண்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் இரு புறமும் கால்களை வைத்து வெள்ளிகுறிச்சி விலக்கு வரை பயணம் செய்தனர்.
நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின் விபத்து குறைந்து வரும் நிலையில் ஒரு சிலர் விதிகளை மீறி இது போன்று நடந்து கொள்வதால் விபத்து அபாயம் உள்ளது.