/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள் : கேட்கிறார் சீமான்
/
தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள் : கேட்கிறார் சீமான்
ADDED : செப் 20, 2024 11:50 PM
திருப்புத்துார்:''தமிழகத்தில் மக்கள் அலைச்சலை தவிர்க்க துறை வாரியாக சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கன்னியாகுமரி ஆகிய நகர்களை தலைநகரங்களாக்கலாம்,'' என, சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி.,யை கொண்டு வந்தது காங்., செயல்படுத்தியது பா.ஜ., கரும்பு விவசாயத்தை காப்பாற்ற கம்பிலிருந்து தொழிற்சாலைகளை ஏற்படுத்தி எத்தனால் எடுக்க முடியும். வெல்லம், நாட்டுச்சர்க்கரை தொழிற்சாலைகளை உருவாக்கலாமே. டாஸ்மாக் சரக்கிற்கு சேமிப்புக் கிடங்கு உள்ளது. ஆனால் விவசாயப் பொருட்களுக்கு மாவட்டத்திற்கு ஒரு கிடங்கு உள்ளதா.
தமிழகத்தை இரண்டு மாநிலங்களாக பிரிக்கக்கூடாது. கல்வி, மருத்துவம், நிர்வாக காரணங்களுக்காக மக்கள் சென்னையில் குவிகின்றனர்.
அதைத் தவிர்க்க 5 தலைநகரங்களை உருவாக்கலாம். கலை பண்பாடுக்கு மதுரை, தொழில்வளர்ச்சிக்கு கோவை, கணினி, கப்பல் போக்குவரத்திற்கு சென்னை, ஆன்மிகத்திற்கு கன்னியாகுமரி. திருச்சியை நிர்வாக தலைநகராக்கலாம். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., செய்ய நினைத்ததை முன்னாள் முதல்வர் கருணாநிதி முடக்கி விட்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் பிறகு ஏன் பல கட்ட தேர்தல்கள் நடத்தினார்கள். மக்கள் பிரச்னைகளை திசை திருப்பத்தான் இந்த விஷயம் உதவும்.
முழுமையான மதுவிலக்கு தான் எங்களுடைய கொள்கை. தந்தையை குடிக்க வைத்து விட்டு தாய்க்கு ரூ.1000 கொடுப்பது கொடுமை. நலத்திட்டங்கள் மீது ஆரோக்கியமான விவாதம் இல்லை.
மதுவிற்பனை குறைவு குறித்து விவாதிக்கிறார்கள். ஆட்சியிலிருப்பவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதி வாரியாக எடுத்திருக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு கொடுத்தார்களா. கணக்கெடுக்க கோரிக்கை வரவில்லை என்கிறார்கள்.
2026 தேர்தலில் மைக் சின்னம் கிடையாது. வேறு சின்னம் தான். என்றார்.