/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பஸ்சில் பெண்ணிடம் 5.75 பவுன் செயின் திருட்டு
/
அரசு பஸ்சில் பெண்ணிடம் 5.75 பவுன் செயின் திருட்டு
ADDED : அக் 07, 2025 04:00 AM
திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் இருந்து திருப்புத்துாருக்கு பஸ்சில் சென்ற காளி யம்மாள் 60, கழுத்தில் இருந்த 5.75 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
தேவகோட்டை அருகே புலிக்குளம்மாவிடுதி கிராமத்தை சேர்ந்த இப்பெண், அக்.,4ம் தேதி தன் மகன், மகளுடன் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு வந்திருந்தார்.
சுவா மி தரிசனத்தை முடித்துவிட்டு, திருப் புத்துார் செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் காத் திருந்தார். அப்போது சிவகங்கை - திருப்புத்துார் அரசு பஸ்சில் மதியம் 1:00 மணிக்கு திருக்கோஷ்டி யூரில் இருந்து திருப் புத்துாருக்கு சென்றுள்ளார்.
மதியம் 1:30 மணிக்கு புதுகாட்டாம்பூர் விலக்கு அருகே சென்ற போது, தன் கழுத்தில் அணிந்து இருந்த 5.75 பவுன் செயினை மர்ம நபர்கள் திருடி சென்றதை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.
அவரது புகாரின் பேரில் திருப்புத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.