/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசிரியையிடம் நகை பறிப்பு சிறுவன் உட்பட 6 பேர் கைது
/
ஆசிரியையிடம் நகை பறிப்பு சிறுவன் உட்பட 6 பேர் கைது
ஆசிரியையிடம் நகை பறிப்பு சிறுவன் உட்பட 6 பேர் கைது
ஆசிரியையிடம் நகை பறிப்பு சிறுவன் உட்பட 6 பேர் கைது
ADDED : நவ 04, 2025 04:09 AM
மானாமதுரை, நவ.4-
மானாமதுரையில் டூவீலரில் சென்ற அரசு பள்ளி ஆசிரியையை கீழே தள்ளிவிட்டு 11 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற வழக்கில் சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை - கீழமேல்குடி ரோட்டில் வசித்து வரும் சுதா 39, சுந்தரநடப்பு அரசு பள்ளியில் ஆசிரியை யாக வேலை பார்க்கிறார்.
அக். 29ம் தேதி பணி முடித்து விட்டு மானாமதுரைக்கு டூவீலரில் வந்தபோது செய்களத்தூர் விலக்கு ரோடு அருகே 2 டூவீலர்களில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் ஆசிரியை சுதாவை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.இதில் காயமடைந்த ஆசிரியை சுதா மானாமதுரை சிப்காட் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவ் வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் கீழத்துாவலைச் சேர்ந்த நாகமுனீஸ்வரன் 26,பீபியேந்தலைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் 18, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராம்பிரசாத்(எ) பிரசாத் 25, மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த துரைராஜ் 18, மற்றும் 16 வயது சிறுவன் ஒருவர் மற்றும் தங்க நகைகளை வைத்திருந்த தேளியைச் சேர்ந்த திராவிடமணி 19,ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சென்னையில் தங்கி ஒன்றாக வேலை பார்த்த நிலையில் பசும்பொன்னிற்கு வந்தபோது இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் கூறினர்.

